Monday, January 10, 2011

Divya desams (descriptions and directions)

1 . ஸ்ரீ ரங்கம் 
  
பெருமாள் : ரங்கநாதன் - அழகிய மணவாளன்
                      புஜங்க சயனம், தெற்கே திருமுகமண்டலம் 
தாயார் : ரங்கநாயகி 


தானாகவே உண்டான ஸ்தலம் (ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரம்). பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இடம். பட்டர், வடக்குத்திருவீதிப்பிள்ளை, பிள்ளை உலகாசாரியன், பெரியநம்பி இவர்களின் அவதாரஸ்தலம். சுவாமி தேசிகன் ரங்கநாதர் திருவடிகளைப் பற்றி பாதுகா சகஸ்ரம் பாடிய இடம். கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடம். திருமங்கையாழ்வார் மதில் கட்டி கைங்கர்யம் செய்த தலம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவனம் சமைத்து திருவரங்கனை அழகு செய்த தலம்.

திருச்சி ஜங்ஷன்-இல் இருந்து 10 கி.மீ தூரம். பேருந்து வசதி உள்ளது. ஸ்ரீ ரங்கம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரம்.


2. திருஉறையூர் 
  பெருமாள் : அழகிய மணவாளன்
                           நின்ற திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலம் 
தாயார் : வாசலக்ஷ்மி , உறையூர் வல்லி

திருப்பாணாழ்வார் அவதாரஸ்தலம்.
திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் மெயின்கார்டு மார்க்கத்தில் 3
கி.மீ. தூரத்தில் நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.   


3 . தஞ்சை மாமணிக் கோயில் 
பெருமாள்: நீலமேகப்  பெருமாள்
                        வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: செங்கமலவல்லி 

பெருமாள்: மணிக்குன்றப் பெருமாள்
தாயார்: அம்புஜவல்லி

பெருமாள்: நரசிம்மர்
தாயார்: தஞ்சை நாயகி

தஞ்சாவூர் - கும்பகோணம் மார்க்கத்தில் தஞ்சையில் இருந்து  4 கி.மீ. தூரத்தில் ஒரே திவ்ய தேசமாக கருதப்படும் மூன்று கோயில்களும் வெண்ணாற்றங்கரையில் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ளன. பேருந்து வசதி உள்ள இடம்.


4 . அன்பில் 
பெருமாள்: வடிவழகிய நம்பி 
                        புஜங்க சயனம், தெற்கே திருமுக மண்டலம்
தாயார்: அழகிய வல்லித் தாயார்

திருச்சிக்கு அருகே லால்குடிக்கு கிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள நடராஜ புரத்தில் இருந்து 3 /4 கி.மீ தூரத்தில் உள்ளது. அப்பக்குடத்தான் சன்னதியில் இருந்து கொள்ளிடம் கடந்தும் செல்லலாம்.



5 . திருக்கரம்பனூர்
பெருமாள்: புருஷோத்தமன் 
                      புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்: பூர்வாதேவி , பூர்ணவல்லி 

சிவன் பிரம்மா விஷ்ணு ஆகியோருக்கு தனித்தனி சன்னிதி உள்ளது.
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ள இத்தலத்தை திருச்சியில் இருந்து துறையூர் மணச்சநல்லூர் செல்லும் பேருந்துகளில் சென்று அடையலாம்.
 
6 .  திருவெள்ளறை

பெருமாள் : புண்டரீகாக்ஷன் 
தாயார்: பங்கயச்செல்வி

திருச்சி - துறையூர் மார்கத்தில் திருச்சியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து பாதையில் இருந்து அரை கி.மீ தூரத்தில் உள்ளது.



7 . திருப்புள்ளம் பூதங்குடி

பெருமாள் : வல்வில்ராமன் 
தாயார்: பொற்றாமரையாள்

கும்பகோணத்திற்கு அருகே சுவாமி மலை - திருவைகாவூர் மார்க்கத்தில் சுவாமி மலையில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.



8. திருப்பேர் நகர்

பெருமாள்: அப்பக்குடத்தான் 
தாயார்: இந்திரா தேவி , கமலவல்லி

தஞ்சை - திருக்காட்டுப்பள்ளி - கல்லணை மார்கத்தில் உள்ளது. அன்பில் தலத்தில் இருந்து கொள்ளிடம் கடந்தும் வரலாம். திருச்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது. கல்லணைக்கு சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது.



9. திரு ஆதனூர் 

பெருமாள்: ஆண்டளக்குமைய்யன்
தயார்: ஸ்ரீ ரங்க நாயகியார்

குடந்தை அருகே சுவாமி மலையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.



10 . திருவழுந்தூர் (தேரழுந்தூர்)


பெருமாள்: ஆமருவியப்பன் - தேவாதி ராஜன்
தயார்: செங்கமலவல்லி

கவிச்சக்ரவர்த்தி  கம்பன் பிறந்த ஊர்.
மாயவரம் - குத்தாலம் - கோமல் வழியில் மாயவரத்தில் இருந்து 21 கி.மீ.



11.திருச்சிறுபுலியூர்

பெருமாள்: அருமாக்கடல் 
தாயார்: திருமாமகள் நாச்சியார் 

மிகவும் சிறிய திருவுருவில் ஆன புஜங்க சயனம் பெருமாளின் கோலம். 
மாயவரம் - பேரளம் பாதையில் கொல்லுமாங்குடி-இல் இருந்து கிழக்கே 3  கி.மீ தொலைவில் உள்ளது. 



12. திருச்சேறை 

பெருமாள்: ஸாரநாதன் 
தாயார்: ஸாரநாயகி - பஞ்சலக்ஷ்மி

கும்பகோணம் - குடவாசல் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. நாச்சியார் கோயிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.


13. தலைச்சங்க நாண்மதியம்

பெருமாள்: நாண்மதியப்பெருமாள்  - வெண்சுடர் பெருமாள் 
தாயார்: தலைச்சங்க நாச்சியார்

மாயவரம் - ஆக்கூர் - சீர்காழி சாலை மார்க்கத்தில் ஆக்கூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. தலைச்சங்காடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் வயலின் நடுவே இத்தலம் அமைந்துள்ளது. 

 
14 . திருக்குடந்தை 

பெருமாள் : சாரங்கபாணி - ஆராவமுதன் 
                         உத்யோக சயனம் , தெற்கே திருமுகமண்டலம் 
தாயார்: கோமளவல்லி 
நாலாயிர திவ்யப்ரபந்தத்தை நாதமுனிகள் தொகுப்பதற்கு காரணமாகியவர் இத்தலத்துப் பெருமாள்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து வசதி மிக்க நகரம்.  



15. திருக்கண்டியூர்

பெருமாள்: ஹரசாபவிமோசனப் பெருமாள்
                              நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம் 
தாயார்: கமலவல்லி
தஞ்சை- திருவையாறு சாலை மார்க்கத்தில் தஞ்சையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.


 
16. திருவிண்ணகர் ( ஒப்பிலியப்பன் கோயில்)

பெருமாள்: ஒப்பிலியப்பன் 
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: பூமி தேவி நாச்சியார்
கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பேருந்து வசதி மிக்க தலம்.




17. திருக்கண்ணபுரம்

பெருமாள்: சௌரிராஜன் 
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: கண்ணபுர நாயகி
எட்டெழுத்து மந்திரத்தின் எழுத்துக்களின் உருவமாக கோலம் தரும் பெருமாள் உரையும் தலம்.
நாகப்பட்டினம் - நன்னிலம் சாலை வழில்யில் உள்ள திருப்புகலூரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்து பஸ் நேரடியாகச் செல்கிறது. மாயவரத்தில் இருந்தும் திருப்புகலூர் வரலாம்.


18. திருவாலி

பெருமாள்: லக்ஷ்மி நரசிம்ஹன் - வயலாளி மணவாளன் 
                        வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்
தாயார்: அம்ருதகடவல்லி
சீர்காழி - திருவெண்காடு பேருந்து பாதையில் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது.

 
18 . திருநகரி

 பெருமாள்: வேதராஜன் 
                        வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்
தாயார்: அமிர்தவல்லி
திருமங்கை ஆழ்வார் அவதாரஸ்தலமான திருக்குறையலூர் இதன் அருகே உள்ளது.
சீர்காழி- பூம்புகார் சாலையில் பேருந்து வசதி உள்ள தலம். திருவாலியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


19 . திருநாகை (நாகப்பட்டினம்)

பெருமாள்: சௌந்தர்யராஜன் - நீலமேகப் பெருமாள்
                         நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: சௌந்தர்யவல்லி
நாகபட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. மாயவரத்திலிருந்து பேருந்துகள் கோயில் அருகிலேயே செல்கிறது.


20 . திருநறையூர் (நாச்சியார் கோயில்)

பெருமாள்: நறையூர் நம்பி 
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: நம்பிக்கை நாச்சியார் - வஞ்சுளவல்லி
திருமங்கையாழ்வார் பெருமாளிடமிருந்து பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற இடம். இங்குள்ள கல்கருட வாகனம் தனிச்சிறப்பு கொண்டது.
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை வழியில் கும்பகோணத்தில் இருந்து  9 கி.மீ தொலைவில் உள்ளது. ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்தும் செல்லலாம்.

21 . நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்)

பெருமாள்: விண்ணகர பெருமாள் - ஜகந்நாதர், நாதநாதன்
                                   வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்
தாயார்: செண்பகவல்லி

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4  கி.மீ தொலைவில் உள்ள தலம். வழி: மகாமக குளம் -> கொற்கை -> ரெட்டிபாளையம் -> நாதன் கோயில்



22 . திரு இந்தளூர் (மாயவரம் திருவிழுந்தூர்)

பெருமாள்: சுகந்தவநநாதன் - பரிமளரங்கன்
                       வீரசயனம், கிழக்கே திருமுகமண்டலம் 
தாயார்: சந்திரசாபவிமோசநவல்லி - புண்டரீகவல்லி

மாயவரம் நகரிலேயே ஒரு பிரிவு. நகரப் பேருந்தும் செல்கிறது.


23. திருச்சித்திரக்கூடம் ( சிதம்பரம்)

பெருமாள்: கோவிந்தராஜர் 
                       போகசயனம், கிழக்கே திருமுகமண்டலம்.
தாயார்: புண்டரீகவல்லி
சென்னை- மாயவரம் இரயில்பாதையில் சிதம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. நடராஜர் கோயிலில் ஒரு தனிக்கோயிலாக உள்ளது.



24. காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி தாடாளன் கோயில்)

பெருமாள்: தாடாளன் - திருவிக்கிரமமூர்த்தி 
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: மட்டவிழுங்குழலி - லோக நாயகி
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் பேருந்துகளில் சென்று கோயில் வாசலில் இறங்கலாம்.




25. திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோயில்)

பெருமாள்: வையங்காத்த பெருமாள் - ஜகத்ரக்ஷகன் 
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: பத்மாஸநவல்லி 
தஞ்சை- திருவையாறு - கும்பகோணம் பேருந்து மார்கத்தில் திருவையாறில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள தலம்.


26. திருக்கண்ணங்குடி

பெருமாள்: ச்யாமளமேனிப்பெருமாள் 
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: அரவிந்தவல்லி நாச்சியார்
நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலை வழியில் ஆழியூர் என்ற இடத்தில் இருந்து தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூர் - நாகை இருப்புப்பாதையில் கீழ்வேளூர் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரம்.




27. திருக்கண்ணமங்கை

 பெருமாள்:    பக்தவத்சலப் பெருமாள் - பத்தராவிப் பெருமாள்
                            நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: அபிஷேகவல்லித் தாயார்
கும்பகோணம்- திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

28. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)

பெருமாள்: கஜேந்திரவரதர் 
                        புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் 
தாயார்: ரமாமணிவல்லி - பொற்றாமரையாள்

தஞ்சாவூர் - திருவையாறு - கும்பகோணம் வழியில் உள்ள தலம். கும்பகோணத்தில் இருந்தும் பாபநாசத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.



29. திருவெள்ளியங்குடி 

பெருமாள்: கோலவில்லி ராமன்
                         புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: மரகதவல்லி நாச்சியார் 

 கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை போகும் பேருந்தில் பெரியவாச்சான் பிள்ளையின் அவதாரஸ்தலமான சேங்கானூரில் இறங்கி 1 கி.மீ தூரம் நடக்க வேண்டும். முட்டகுடியில் இருந்தும் செல்லலாம்.




30. திரு மணிமாடக் கோயில்

பெருமாள்: நந்தாவிளக்குப் பெருமாள் - நாராயணன்
                        வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்:  புண்டரீகவல்லி

தை அமாவாசைக்கு அடுத்த நாள் 11 பெருமாள்களின் திருநாங்கூர் கருட சேவை இத்தலத்தில்தான் நடைபெறுகிறது. 
சீர்காழியில் இருந்து 8 கி.மீ தொலைவில் நகரப் பேருந்து வசதியுள்ள தலம். திருநாராயணப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.


31. வைகுந்த விண்ணகரம்

பெருமாள் : வைகுந்தநாதன்    - தாமரைக்கண்ணன் 
                        வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: வைகுந்தவல்லி

சீர்காழியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருநாங்கூரிலேயே உள்ள தலம்.
  

32. அரிமேய விண்ணகரம் 
[திருநாங்கூர் குடமாடுகூத்தர் கோயில்]

பெருமாள்: குடமாடு கூத்தர்
                        வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: அம்ருதகடவல்லி

சீர்காழியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருநாங்கூரிலேயே உள்ள தலம்.


33. திருத்தேவனார் தொகை  
[கீழச்சாலை மாதவப் பெருமாள்]

பெருமாள்: தெய்வநாயகப் பெருமாள் - மாதவன்
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: கடல்மகள் நாச்சியார்

இத்தலத்தை கீழச்சாலை மாதவப் பெருமாள் கோயில் என்றும் அழைப்பர். திருநாங்கூர் திவ்ய தேசங்களில் ஒன்று. சீர்காழி - திருவெண்காடு பேருந்து வழியில் திருவாலியில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.



34. திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)

பெருமாள்: புருஷோத்தமர்
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: புருஷோத்தம நாயகி

மணவாளமாமுனிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாசாசனம் செய்த தலம்.
திருநாங்கூரிலேயே உள்ளது.

 
35. செம்பொன் செய் கோயில்

பெருமாள்: பேரருளாளன் - செம்பொன்னரங்கர்   
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: அல்லிமாமலர் நாச்சியார்

திருநாங்கூரிலேயே உள்ள தலம்.



36. திருத் தெற்றியம்பலம்  
[பள்ளி கொண்ட பெருமாள் கோயில்] 

பெருமாள்: செங்கண்மால் - ரங்கநாதர்
                        புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்

சீர்காழியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திருநாங்கூரிலேயே அமைந்துள்ள தலம்.

 
37. திருமணிக்கூடம் 

பெருமாள்: மணிக்கூட நாயகன் - வரதராஜன்
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: திருமகள் நாச்சியார்

சீர்காழியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திருநாங்கூரில் இருந்து கிழக்கே 1 கி.மீ தூரத்தில் உள்ளது.

 
38. திருக்காவளம்பாடி 

பெருமாள்: கோபாலகிருஷ்ணன்
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: செங்கமல நாச்சியார் - மடவரல் மங்கை
    
திருமங்கையாழ்வார் அன்னதான கைங்கர்யம் செய்த மங்கை மடமும் அவரது அவதாரஸ்தலமான திருக்குறையலூரும் அருகே உள்ளது.
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது. திருநாங்கூரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.




39. திருவெள்ளக்குளம்  
[திருநாங்கூர் - அண்ணன் கோயில்]

பெருமாள்: கண்ணன் நாராயணன் -சீனிவாசன்
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: பூவார் திருமகள் - பத்மாவதி

மணவாள மாமுனிகளுக்குப்  பெருமாள் காட்சி கொடுத்த தலம்.
சீர்காழி தரங்கம்பாடி சாலையில் சீர்காழியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.




40 . திருப்பார்த்தன்பள்ளி 

பெருமாள்: தாமரையாள் கேள்வன் 
                        நின்ற திருக்கோலம், மேற்கே திருமுகமண்டலம்
தாயார்: தாமரை நாயகி

சீர்காழியில் இருந்து 1 கி.மீ தூரத்திலும் திருவெண்காட்டில் இருந்து 2 கி.மீ தூரத்திலும் உள்ளது.




41. திருமாலிருஞ்சோலை அழகர் கோயில்

பெருமாள்: அழகர் - கள்ளழகர், மாலாங்காரர் 
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: ஸுந்தரவல்லி நாச்சியார் 

மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. அழகர் கோயில் என்று பிரசித்தம். மதுரையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.




42. திருக்கோஷ்டியூர் 

பெருமாள்: உரகமெல்லணையான்  சௌம்யநாராயணன் 
                        புஜங்க சயனம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: திருமாமகள் நாச்சியார்

ராமானுஜர் இக்கோயிலின் கோபுரத்தில் இருந்து திருமந்திரம் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த தலம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. திருக்கோஷ்டியூர் நம்பியின் அவதாரஸ்தலம்.
மதுரை- திருப்பத்தூர் - சிவகங்கை மார்கத்தில் திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. காரைக்குடியில் இருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது.





43 . திருமெய்யம் 

பெருமாள்: ஸத்யகிரி  நாதன் - மெய்யப்பன்
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: உய்ய வந்த நாச்சியார் - உஜ்ஜீவனத் தாயார்

இது ஒரு குடைவரைக் கோயில். புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.




44. திருப்புல்லாணி (தர்ப்ப சயனம்)

பெருமாள்: கல்யாண ஜகந்நாதன்
                        வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: கல்யாணவல்லி - பத்மாஸநி 

ராமநாதபுரத்தில் இருந்து தெற்கே 8 கி.மீ தூரத்தில் உள்ளது. திருச்சி - மதுரை - காரைக்குடி போன்ற இடங்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு பேருந்து வசதி உள்ளது. 




45. திருத்தண்கால் 

பெருமாள்: தண்காலப்பன்
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்

சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் மார்கத்தில் சிவகாசியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. நகரப்பேருந்து வசதியும் உள்ளது. விருதுநகர் - தென்காசி இரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் ஒரு இரயில் நிலையம்.




46. திருமோகூர் 

பெருமாள்: காளமேகப் பெருமாள்
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: மேகவல்லி - மோகூர்வல்லி

மதுரையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. மதுரையில் இருந்து திருவாதவூர் செல்லும் நகரப் பேருந்துகள் திருமோகூருக்குச் செல்கின்றன.




47. திருக்கூடல்  (தென் மதுரை)

பெருமாள்: கூடலழகர்
                       வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: மதுரவல்லி - மரகதவல்லி, வரகுணவல்லி நாச்சியார்

பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய தலம்.
மதுரை மாநகரிலேயே மதுரை இரயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கில் 1 கி.மீ தூரத்தில் உள்ளது.
     

 48. ஸ்ரீ வில்லிபுத்தூர்

பெருமாள்: வடபத்ர சயனர் - ரங்கமன்னார்
                      வடபத்ர சயனம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: ஆண்டாள் - கோதை நாச்சியார்

பெரியாழ்வார் - ஆண்டாள் அவதாரஸ்தலம்.
மதுரையில் இருந்து ராஜபாளையம் - தென்காசி செல்லும் வழித்தடத்தில் உள்ள தலம். தென்காசி விருதுநகர் ரயில்பாதையில் உள்ள ரயில் நிலையம்.

 
49. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)

பெருமாள்: ஆதிநாதப் பெருமாள் - பொலிந்து நின்ற பிரான்
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: ஆதிநாத வல்லி - குருகூர்வல்லி 
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலை மார்கத்தில் ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படும் தலம். திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் பாதையில் ஆழ்வார் திருநகரி இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. 




50. திருத்தொலைவில்லி மங்கலம் (இரெட்டை திருப்பதி)

பெருமாள்: தேவிபிரான்
                        நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: உபயநாச்சிமார்கள் 
பெருமாள்: அரவிந்தலோசனன் 
                                வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: கருந்தடங்கண்ணி நாச்சியார்

ஆழ்வார் திருநகரியில் இருந்து திருச்செந்தூர் பாதையில் 3  கி.மீ தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றைக் கடந்து இத்தலத்தை சேவிக்கலாம்.

  
51. சிரீவரமங்கை (வானமாமலை - நாங்குநேரி )

பெருமாள்: தெய்வநாயகன் - தோதாத்ரி
                        வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: சிரீவரமங்கை

திருநெல்வேலி - நாகர்கோயில் மார்கத்தில் திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நான்குநேரி என்று அழைக்கப்படும் தலம். வானமாமலை மடத்தின் தலைமைப் பீடம் அமைந்துள்ள தலம்.
  

52. திருப்புளிங்குடி 

பெருமாள்: காய்சின  வேந்தன் 
                                    புஜங்க சயனம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: மலர்மகள் நாச்சியார் - புளிங்குடி வல்லி

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள திவ்ய தேசம். வரகுணமங்கையில்  இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்று.


53 . திருப்பேரை (தென்திருப்பேரை)

பெருமாள்: மகரநெடுங்குழைக்காதன் 
                       வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: குழைக்காதுவல்லி நாச்சியார்

திருநெல்வேலி - ஆழ்வார் திருநகரி - திருச்செந்தூர் மார்கத்தில் ஆழ்வார் திருநகரியில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்று.



54. ஸ்ரீ வைகுண்டம் 

பெருமாள்: கள்ளப்பிரான் 
                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: வைகுந்தவல்லி நாச்சியார்

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலை மார்கத்தில் திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ள தலம். நவதிருப்பதிகளில் ஒன்று.




55. வரகுணமங்கை (நத்தம்)

பெருமாள்: விஜயாஸனர் 
                         வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: வரகுணவல்லி 

நத்தம் என்று எல்லோர்க்கும் தெரியவரும் இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திற்கு கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்று. மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த தலம்.




56. திருக்குளந்தை (பெருங்குளம்)

பெருமாள்: மாயக் கூத்தன் - ஸ்ரீநிவாசன்
                நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: குளந்தைவல்லி - அலமேலு மங்கை   

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் செல்லும் சாலை மார்கத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. பெருங்குளம் என்று அழைக்கப்படும் இத்தலம் நவதிருப்பதிகளுள் ஒன்று. 




57. திருக்குறுங்குடி 

பெருமாள்: வைஷ்ணவ நம்பி
                         நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: குறுங்குடிவல்லி   நாச்சியார்

திருமங்கையாழ்வார் பரமபதம் பெற்ற தலம். குறுங்குடி நம்பி, நின்ற நம்பி, வடுக நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என்ற திருநாமங்களில் பெருமாள் விளங்கும் தலம்.
நாங்குநேரியில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தலம். வள்ளியூர் களக்காடு ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.





58. திருக்கோளூர் 

பெருமாள்: வைத்த மாநிதி  - நிக்ஷேப வித்தன்
                        புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்: கோளூர்வல்லி நாச்சியார்

மதுரகவி ஆழ்வார் அவதாரஸ்தலம். நவதிருப்பதிகளுள் ஒன்று. 
ஆழ்வார் திருநகரி - திருச்செந்தூர் மார்கத்தில் ஒருகிளைப்பாதையில் ஆழ்வார் திருநகரியில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது.

 
59. திருவனந்தபுரம் 

பெருமாள்: அனந்த பத்மநாபன் 
                            புஜங்க சயனம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: ஸ்ரீஹரிலக்ஷ்மி 

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. 


60. திருவண்பரிசாரம்   
[திருப்பதிசாரம்]
பெருமாள்: திருக்குறளப்பன் - திருவாழ்மார்பன் 
                        வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார்: கமலவல்லி நாச்சியார்

   நாகர்கோயிலுக்கு வடக்கே 4 கி.மீ தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது.


61. திருக்காட்கரை (திருகாக்கரா)
பெருமாள் : காட்கரையப்பன் 
                     நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்
 தாயார் : வாத்ஸல்யவல்லி  - பெருஞ்செல்வநாயகி  

ஷோரனூர் - எர்ணாகுளம் இரயில்பாதை வழியில் உள்ள இடைப்பள்ளி இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3  கி.மீ தூரத்தில் உள்ளது. எர்ணாகுளம் - ஆல்வாய் மார்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து 7  கி.மீ தூரத்தில் ஒரு கிளைப்பாதையில் உள்ளது.
62. திருமூழிக்களம் 
 பெருமாள் :  திருமூழிக்களத்தான் - அப்பன்
                          நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
 தாயார்: மதுரவேணி நாச்சியார்

 கேரளாவில் ஆல்வாயிலிருந்து பேருந்து வசதி உள்ளது. அங்கமாலி இரயில் நிலையத்தில் இருந்தும் எர்ணாகுளத்தில் இருந்தும் பேருந்து உள்ளது.

(The description and the route details for the following divyadesams will be added soon .)

63. திருப்புலியூர் (குட்ட நாடு)
64. திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு )
65. திருநாவாய்
66. திருவல்லவாழ் (ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம்)
67. திருவண்வண்டூர் (திருவமுண்டூர்)
68. திருவட்டாறு

69. திருவித்துவக்கோடு
70. திரக்கடித்தானம்  
71. திருவாறன்விளை (ஆரமுளா )
72. திருவஹீந்திரபுரம் 
73. திருக்கோவலூர் 
74. திருக்கச்சி (காஞ்சீபுரம்)
75. அட்டபுயக்கரம் (காஞ்சீபுரம்)
76. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சீபுரம்)
77. திருவேளுக்கை (காஞ்சீபுரம்)
78. திருப்பாடகம் (பாண்டவதூதர்)
79. திருநீரகம் (காஞ்சீபுரம்)
80. நிலாத்திங்கள் துண்டம் (காஞ்சீபுரம்)
81. திருவூரகம் (காஞ்சீபுரம்)
82. திருவெக்கா (யதோத்தகாரீ பெருமாள் )
83. திருக்காரகம் (காஞ்சீபுரம்)
84. திருக்கார் வானம் (காஞ்சீபுரம்)
85. திருக்கள்வனூர் (காஞ்சீபுரம்)
86. திருப்பவளவண்ணம் (காஞ்சீபுரம்)
87. திருப்பரமேச்சுர விண்ணகரம் (காஞ்சீபுரம் - வைகுந்தப்பெருமாள் கோயில்)
88. திருப்புட்குழி
89. திருநின்றவூர் (திண்ணனூர்)
90. திருவெவ்வுள் (திருவள்ளூர்)
91. திருநீர்மலை
92. திருவிடவெந்தை (திருவடந்தை)
93. திருக்கடன்மலை (மஹாபலிபுரம்)
94. திருவல்லிக்கேணி 
95. திருக்கடிகை (சோளிங்கர்)
96. திருவேங்கடம் (திருப்பதி)
97. சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
98. திருவயோத்தி (அயோத்தி)
99 . திருநைமிசாரணியம் 
100. சாளக்கிராமம் (முக்திநாத்)
101. திருவதரியாச்சிரமம் (பத்ரிநாத்)
102. திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரயாகை)
103. திருப்பிரிதி (ஜோஷிமட்)
104. திருத்துவாரகை (துவாரகா)
105. திருவடமதுரை 
106. திருவாய்ப்பாடி (கோகுலம் )
107. திருப்பாற்கடல் 
108. திருப்பரமபதம்




No comments:

Post a Comment